×

சென்னை மெரினா கடற்கரை பகுதியில் போலீஸ் என கூறி மிரட்டி ஜி-பே மூலம் ரூ.12,000 பணம் பறித்த நபர் கைது..!!

சென்னை: சென்னை மெரினா கடற்கரை பகுதியில் போலீஸ் என கூறி மிரட்டி ஜி பே மூலம் பணம் பெற்று ஏமாற்றிய நபர் கைது செய்யப்பட்டார். ரூ.12,000 மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை, மேடவாக்கம் விக்னராதபுரம் பகுதியில் வசித்து வரும் பிரகாஷ் என்பவர் கடந்த செப்.22ம் தேதி இரவு மெரினா, பார்த்தசாரதி ஆர்ச் எதிரில் உள்ள மெரினா கடற்கரை மணற்பரப்பில் அவரது பெண் நண்பருடன் பேசிக் கொண்டு இருந்தபோது, அங்கு வந்த ஒரு நபர் தன்னை போலீஸ் எனக்கூறி, மேற்படி பிரகாஷ் மற்றும் அவரது பெண் நண்பரை மிரட்டி, பிரகாஷிடம் இருந்து ஜி பே மூலம் ரூ.12,000 பணம் பெற்று சென்றுள்ளார்.

இது குறித்து பிரகாஷ், D-5 மெரினா காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். D-5 மெரினா காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட, அசர்அலி என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.12,000 பணம் மற்றும் குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் கைது செய்யப்பட்ட அசர்அலி என்பவர் மெரினா கடற்கரை பகுதியில் பலூன் கடை வைத்திருப்பதும், போலீஸ் எனக்கூறி பிரகாஷிடம் பணத்தை பெற்று மோசடி செய்ததும், இவர் மீது ஏற்கனவே அடையாறு மற்றும் வியாசர்பாடி காவல் நிலையங்களில் தலா 1 திருட்டு வழக்கு உள்ளதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட அசர்அலி, விசாரணைக்குப் பின்னர், நேற்று (26.09.2023) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

The post சென்னை மெரினா கடற்கரை பகுதியில் போலீஸ் என கூறி மிரட்டி ஜி-பே மூலம் ரூ.12,000 பணம் பறித்த நபர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Chennai's Marina beach ,CHENNAI ,Chennai Marina beach ,
× RELATED கடலில் பிளாஸ்டிக், ரசாயனம் கலப்பதை தடுக்க விழிப்புணர்வு படகு பயணம்